பிரபல சுற்றுலா தல அபிவிருத்தி - ரூ.2.4 பில்லியன் நிதியுதவி வழங்கிய தென் கொரியா
கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (KOICA) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிகிரியாவில் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்தவும், அதன் சுற்றுலா ஈர்ப்பை அதிகரிக்கவும் ஒரு சிறப்பு முயற்சியை முன்மொழிந்துள்ளது.
இந்த திட்டமானது சிகிரியா பாறைக்கான அணுகல் பாதையை மேம்படுத்துதல், மாற்று அணுகல் பாதையை அமைத்தல் மற்றும் சிகிரியா அருங்காட்சியகம், உணவகம் மற்றும் டிக்கெட் கவுண்டர் போன்ற வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல முயற்சிகளை உள்ளடக்கியது.
மேலும் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டுதலின்படி, மத்திய கலாச்சார நிதியம் மற்றும் KOICA ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பான கூட்டம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் அமைச்சில் டிசம்பர் 27ஆம் திகதி நடைபெற்றது.
மேலும் இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.2.4 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |