நொடிகளில் ரீசார்ஜ் செய்யும் சோடியம் பேட்டரி., உருவாக்கி அசத்திய தென் கொரிய விஞ்ஞானிகள்
சில நொடிகளில் ரீசார்ஜ் செய்யக்கூடிய உயர் சக்தி கொண்ட ஹைப்ரிட் சோடியம் அயன் பேட்டரியை (Na-ion batteries) தென் கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் இது ஒரு பா ரிய முன்னேற்றம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
சோடியம் அயன் கலப்பின ஆற்றல் சேமிப்பு செல்களை தயாரிப்பதில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்தினர்.
மொபைல் போன்கள் மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், தற்போது அதிக சக்தி கொண்ட மின்வேதியியல் ஆற்றல் சேமிப்பு சாதனங்களுக்கு அதிக தேவை உள்ளது.
லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு மாற்றாக இது மாறும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
'Energy Storage Materials' பத்திரிக்கை, இந்த ஆய்வின் சிறப்பம்சங்களைக் கூறி சமீபத்திய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி தற்போது தயாரிக்கப்படும் பேட்டரிகள் அனைத்தும் லித்தியம் கனிமத்தால் செய்யப்பட்டவை. இது பூமியில் கிடைப்பது அரிது.
லித்தியம் கிடைப்பதை விட சோடியம் கிடைப்பது 1000 மடங்கு அதிகம். நம்மைச் சுற்றியுள்ள ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது, சோடியம் அயனியை இரசாயன மற்றும் மின் ஆற்றல் வடிவில் சேமித்து வைப்பது மலிவான, சாத்தியமான ஆற்றல் மூலமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
fast charging Sodium batteries, South Korea, Sodium ion Battery, Na-ion batteries, Li-ion Batteries, Lithium ion Battery