பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சை பேச்சு.., நடிகர் எஸ்.வி சேகருக்கு ஒரு மாத சிறை உறுதி
பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி சேகர் கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பதிவிட்டார்.
அது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், அவரது வீட்டுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் போராட்டமும் நடத்தினார்கள்.
அதனையடுத்து எஸ்வி சேகருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அப்போது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு எதிராக தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒருமாத சிறை தண்டனையை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் இன்று உறுதி செய்துள்ளார்.
மேலும் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |