கடைசி 2 ஆண்டுகள் கண் பார்வை இல்லாமல் ஆடினேன்: தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் தகவல்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எதற்காக சீக்கிரமாக ஓய்வினை அறிவித்தேன் என்ற காரணத்தை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
மிஸ்டர் 360
மிஸ்டர் 360 என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஏ பி டிவில்லியர்ஸ், தனக்கு பார்வை குறைபாடு ஏற்பட்ட காரணத்தால் ஓய்வினை அறிவித்தேன் என தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டனான டி வில்லியர்ஸ் இதுவரை 420 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் மூலம் 20,014 ஓட்டங்களை குவித்துள்ளார், அத்துடன்ன்184 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
PTI
ஓய்வு அறிவிப்பு இந்நிலையில் கண் பார்வை திறனை வேகமாக இழந்து கொண்டு வந்ததால் சீக்கிரமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன் என தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் 7 வயது சிறுவனின் தந்தை வெளியிட்ட உருக்கமான வேண்டுகோள்: அடையாளங்களை வெளியிட்ட பொலிஸார்
அத்துடன் தன்னுடைய கடைசி இரண்டு ஆண்டுகளில் இடது கண் பார்வையை வைத்து மட்டுமே விளையாடி வந்ததாக டிவில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
CSA
2015ம் ஆண்டு உலக கோப்பை தோல்வி அதிக வலியை தந்தது, அதே சமயம் தனக்கு கண் பார்வையும் குறைந்து கொண்டே வந்தது. எனவே 2018ம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகினேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் புகழ்ச்சி வெளிச்சம் வேண்டும் என்பதற்காக ஓய்வினை அறிக்கவில்லை, எனது கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாக அமைந்தது, எனவே 2019 உலக கோப்பை முன்னதாகவே டிவில்லியர்ஸ் ஓய்வினை அறிவ்த்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |