டி20 உலகக்கிண்ணம்: கடைசி பந்துவரை திக் திக்..வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா ஹாட்ரிக் வெற்றி
தென் ஆப்பிரிக்க அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, தனது பட்டியலில் முதலிடம் பிடித்தது.
நியூயார்க்கில் நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது வங்கதேசம்.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கிளாசென் 46 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தன. எனினும், டௌஹித் ஹிரிடோய் மற்றும் மஹ்முதுல்லா கூட்டணி இலக்கை நோக்கி பயணித்தது.
37 ஓட்டங்கள் எடுத்திருந்த ஹிரிடோய் ஆட்டமிழக்க, வங்கதேச அணி தடுமாறியது. கடைசி ஓவரில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
கேஷவ் மகாராஜ் வீசிய அந்த ஓவரில் ஜாக்கர் அலி 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி 3 பந்துகளில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. நான்காவது பந்தில் ஒரு ரன் கிடைக்க, அடுத்த பந்தில் மஹ்மதுல்லா (20) அவுட் ஆனார்.
கடைசி பந்தில் 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் தஸ்கின் அகமது ஒரு ரன் மட்டுமே எடுக்க, தென் ஆப்பிரிக்கா 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மகாராஜ் 3 விக்கெட்டுகளும், ரபாடா மற்றும் நோர்க்கியா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
A good knock ?
— ICC (@ICC) June 10, 2024
46 runs for South Africa earns Heinrich Klaasen the @Aramco POTM award ?#SAvBAN #T20WorldCup pic.twitter.com/dHxJfYIgwi
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |