சிக்ஸர்களை தெறிக்கவிட்ட மார்க்ரம்! தாறுமாறான ஆட்டம்
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிரிஸ்டோலின் கவுண்டி மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் மற்றும் மார்க்ரம் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்ட மார்க்ரம் 27 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார். ஹென்ரிக்ஸ் 53 பந்துகளில் 74 ஓட்டங்கள் எடுத்தார்.
PC: Reuters
அடுத்து வந்த ஸ்டப்ஸ் 24 ஓட்டங்களும், பிரிட்டோரியஸ் 21 ஓட்டங்களும் எடுக்க தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்கள் குவித்தது.
icc-cricket
பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணியில் தொடக்க வீரர்கள் சொதப்ப, விக்கெட் கீப்பர் டக்கர் அதிரடியாக 38 பந்துகளில் 78 ஓட்டங்கள் விளாசினார்.
PC: Twitter (@cricketireland)
ஜார்ஜ் டாக்ரெல் 28 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுக்க, ஏனைய வீரர்கள் சொதப்பியதால் அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.
தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிக்ஸ் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.