136 பந்தில் 173 ரன் விளாசிய வீரர்! இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்டில் மிரட்டல்
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க ஏ அணித்தலைவர் மார்க்யூஸ் அக்கர்மன் 173 ஓட்டங்கள் விளாசினார்.
சுருண்ட இங்கிலாந்து லயன்ஸ்
தென் ஆப்பிரிக்க ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி அருண்தெல் கேஸலில் நடந்து வருகிறது.

இங்கிலாந்து லயன்ஸ் முதல் இன்னிங்ஸில் 157 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக எகான்ஷ் சிங் 25 ஓட்டங்கள் எடுத்தார். ஜேசன் ஸ்மித் 4 விக்கெட்டுகளும், மோகோனா 3 விக்கெட்டுகளும், டேன் பேட்டர்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் தென் ஆப்பிரிக்க ஏ அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. லெசேகோ 14 ஓட்டங்களிலும், ஸோர்சி 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஹெர்மன் (6), ஹம்ஸா (2) ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, அணித்தலைவர் மார்க்யூஸ் அக்கர்மன் (Marques Ackerman) அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.

அக்கர்மன் ருத்ரதாண்டவம்
அக்கர்மன் ஒருநாள் போட்டியைப் போல் சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்டு சதம் விளாச தென் ஆப்பிரிக்க அணி 300 ஓட்டங்களை கடந்தது.
136 பந்துகளை எதிர்கொண்ட மார்க்யூஸ் அக்கர்மன், 5 சிக்ஸர்கள் மற்றும் 25 பவுண்டரிகளுடன் 173 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி 331 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. டேன் பேட்டர்சன் 27 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இங்கிலாந்தின் தரப்பில் மிட்செல் ஸ்டான்லி, எடி ஜேக் தலா 3 விக்கெட்டுகளும், ஆக்போர்ன் மற்றும் மௌஸ்லே தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |