அசத்தலாக தாவிப் பிடித்த கேட்ச்! கைதட்டலால் அதிர்ந்த மைதானத்தின் வீடியோ
தென் ஆப்பிரிக்க மகளிர் அணியின் கேப்டன் சுனே லுஸ் பிடித்த அட்டகாசமான கேட்ச் அரங்கத்தை அதிர வைத்தது.
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
நியூ ரோடு மைதானத்தில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை அதிரடி ஆட்டத்தில் மிரட்டிக் கொண்டிருந்தார். அவர் 24 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ட்ரியோன் பந்துவீச்சில் இறங்கி வந்து ஷாட் ஒன்றை அடித்தார்.
அப்போது விரைந்து வந்த தென் ஆப்பிரிக்க கேப்டன் சுனே லுஸ், தாவிச்சென்று கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த கேட்சை பார்த்த ரசிகர்கள் வியந்து கைதட்டி கொண்டாடினர். ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேட்ச் தொடர்பான வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
A special catch ?
— England Cricket (@englandcricket) July 23, 2022
??????? ENGvSA ?? pic.twitter.com/O3TuSBsJYB
PC: AFP