மகளிர் டி20 உலக கோப்பை போட்டி: அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா!
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
முதல் அரையிறுதி போட்டி
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
Incredible run-chase from South Africa as they beat Australia to reach the final.#AUSvsSA #T20WorldCup #hereforher pic.twitter.com/mOyWlcI9v3
— amit panwar (@Kumaramit00684) October 17, 2024
அதன்படி, முதல் பேட்டிங்கில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் குவித்தது.
அவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பெத் மூனி(Beth Mooney) 42 பந்துகளுக்கு 44 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா
இறுதிப் போட்டி கனவுடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி தனது திறமையான ஆட்டத்தை ஆரம்பம் முதலே வெளிப்படுத்தியது.
கேப்டன் லாரா வோல்வார்ட்(Laura Wolvaardt) 37 பந்துகளில் 42 ஓட்டங்களும், அன்னெக் போஷ்(Anneke Bosch) 48 பந்துகளில் 74 ஓட்டங்களும் குவித்து அணியை வெற்றி அடைய செய்தனர்.
CONGRATULATIONS to the Proteas Women – through to the FINAL! 🏆⚡️🏏🇿🇦
— Team South Africa (@OfficialTeamRSA) October 17, 2024
What a brilliant performance, taking down Australia by 8 wickets in the #T20WorldCup semi-final! #TeamSA #ForMyCountry pic.twitter.com/6YsS5o5spz
இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 17.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 135 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் 2024 ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |