சிக்ஸர்மழை பொழிந்த வீரர்கள்! மிரட்டலான பந்துவீச்சில் சுருண்ட அணி.. தென்னாப்பிரிக்கா அதிரடி வெற்றி
நோர்ட்ஜெ 10 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
ஷம்ஸி 20 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
சிட்னியில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
உலகக்கோப்பை தொடரில் இன்று மூன்று போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகள் மோதின.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்கள் குவித்தது. சிக்ஸர் மழை பொழிந்த ரோஸோவ் மற்றும் டி காக் இணை 168 ஓட்டங்கள் குவித்தது.
டி காக் 38 பந்துகளில் 63 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 7 பவுண்டரிகள்), ரோஸோவ் 56 பந்துகளில் 109 ஓட்டங்களும் (8 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) விளாசினார்.
CENTURY ALERT
— ICC (@ICC) October 27, 2022
South Africa dasher Rilee Rossouw brings up his second T20I century and the first one at this year's tournament#T20WorldCup | #SAvBAN | ?https://t.co/Ji9TL3CpQ9 pic.twitter.com/45g0t2Jqav
LOVING IT QUINNY ?
— Proteas Men (@ProteasMenCSA) October 27, 2022
Quinton de Kock is starting to flow #SAvBAN #T20WorldCup #BePartOfIt pic.twitter.com/ElQ9XYEdwN
பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி அடுத்தது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நோர்ட்ஜெவின் புயல்வேக பந்துவீச்சையும், ஷம்ஸியின் சுழற்பந்து வீச்சையும் சமாளிக்க முடியாமல் அந்த அணி 16.3 ஓவரில் 101 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக லித்தன் தாஸ் 34 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா 3 புள்ளிகளை பெற்றுள்ளது.
A blistering start by Soumya Sarkar and Najmul Hossain Shanto as Bangladesh try and chase down South Africa's massive total#T20WorldCup | #SAvBAN | ?https://t.co/Ji9TL3CpQ9 pic.twitter.com/5CLWBpNbNB
— ICC (@ICC) October 27, 2022
South Africa register a thumping win over Bangladesh, clinching two crucial points.#T20WorldCup | #SAvBAN | ?: https://t.co/Ji9TL3CpQ9 pic.twitter.com/uIxptSdIEK
— ICC (@ICC) October 27, 2022