தென் ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்த இருவர்! சாதனை படைக்குமா வங்கதேசம்?
உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம்
மும்பை வான்கடே மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் 85 ஓட்டங்கள் விளாசிய ரீஸ் ஹென்றிக்ஸ் 12 ஓட்டங்களில் இருந்தபோது சொரிஃபுல் இஸ்லாம் ஓவரில் போல்டு ஆனார்.
A dancing celebration ?
— Sportskeeda (@Sportskeeda) October 24, 2023
Shoriful Islam knocks over Reeza Hendricks. ?
?: Hotstar#SAvBAN #CWC23 #Sportskeeda pic.twitter.com/NicwKnhAlR
வான் டெர் டுசன் அவுட்
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வான் டெர் டுசன் ஒரு ரன்னில் மெஹிதி ஓவரில் LBW முறையில் ஆட்டமிழந்தார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக 60 ஓட்டங்கள் விளாசியிருந்தார்.
இதன்மூலம் வங்கதேச அணி 8 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. எனவே, பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாதனை படைத்தது போல், இன்றைய போட்டியில் வங்கதேசமும் வெற்றி பெற்று சாதனை படைக்குமா என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
Mehidy Hasan Miraz strikes ?
— Sportskeeda (@Sportskeeda) October 24, 2023
Rassie van der Dussen departs for just 1 run.
??: 36/2 (8)
?: Hotstar#MehidyHasan #SAvBAN #CWC23 #Sportskeeda pic.twitter.com/rKk3BexC79
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |