இலங்கையின் புயல்வேக தாக்குதலில் சுருண்ட தென் ஆப்பிரிக்க அணி
டர்பன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 191 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் தொடங்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. மார்க்ரம் (9), ஸோர்சி (4) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஸ்டப்ஸை 16 ஓட்டங்களில் லஹிரு குமாரா வெளியேற்றினார்.
அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்குதலில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அணித்தலைவர் டெம்பா பவுமா (Temba Bavuma) மட்டும் நிலைத்து நின்று ஆட, ஏனைய வீரர்கள் ஆட்டமிழந்ததால் தென் ஆப்பிரிக்கா 191 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பவுமா 117 பந்துகளில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கையின் தரப்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |