கம்பீரமாக வலம் வந்த நியூசிலாந்து அணியை தரைமட்டமாக்கிய தென் ஆப்பிரிக்கா!
புனேவில் நடந்த உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி 190 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
வான் டர் டுசன் விளாசல்
உலகக்கோப்பையின் 32வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
பலம் வாய்ந்த இரு அணிகள் மோதியதால் எதிர்பார்ப்பு அதிகளவில் இந்தப் போட்டிக்கு இருந்தது. முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 357 ஓட்டங்கள் குவித்தது.
ருத்ர தாண்டவம் ஆடிய வான் டர் டுசன் 133 ஓட்டங்களும், டி காக் 114 ஓட்டங்களும் விளாசினர்.
Twitter
படுதோல்வி
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கிளென் பிலிப்ஸையை தவிர யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.
இதனால் நியூசிலாந்து அணி 167 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. கிளென் பிலிப்ஸ் (Glenn Phillips) 60 ஓட்டங்களும், யங் 33 ஓட்டங்களும் எடுத்தனர். மஹாராஜ் 4 விக்கெட்டுகளும், ஜென்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
AP Photo/Manish Swarup
IANS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |