World Cup 2023: சிக்ஸர் மழையில் நனைந்த ரசிகர்கள்! மூவர் சதம் விளாசல்..429 ஓட்டங்கள் இலக்கை எட்டுமா இலங்கை?
உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி 429 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
டி காக்-டுசன் அதிரடி
டெல்லியில் தொடங்கிய இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது. கேப்டன் பவுமா 8 ஓட்டங்களில் வெளியேற, டி காக் மற்றும் டுசன் அதிரடியில் மிரட்டினர்.
டி காக் 84 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த எய்டென் மார்க்கரம் ருத்ர தாண்டவம் ஆடினார்.
You know you love to see it ?#CWC23 #SAvSL #BePartOfIt pic.twitter.com/2l47WXTI3O
— Proteas Men (@ProteasMenCSA) October 7, 2023
மறுமுனையில் சதம் விளாசிய டுசன் 108 (110) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்து கிளாசென் அதிரடியாக 20 பந்துகளில் 32 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.
ODI half-century number 13 secured ?#CWC23 #SAvSL #BePartOfIt pic.twitter.com/PZqt1d6wfG
— Proteas Men (@ProteasMenCSA) October 7, 2023
மார்க்ரம் சாதனை சதம்
தொடர்ந்து அதிரடி காட்டிய மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்தார். இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
அவர் 54 பந்துகளில் 106 ஓட்டங்கள் குவித்தார். இதில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடங்கும்.
இமாலய இலக்கு
கடைசி கட்டத்தில் டேவிட் மில்லர் சரவெடியாய் வெடித்தார். மொத்தம் 21 பந்துகளை எதிர்கொண்ட மில்லர் 39 ஓட்டங்களும், யென்சென் 12 ஓட்டங்களும் எடுக்க தென் ஆப்பிரிக்க அணி 428 ஓட்டங்கள் குவித்தது.
இலங்கை அணியில் பத்திரனா 95 ஓட்டங்களும், ரஜிதா 90 ஓட்டங்களும், மதுஷன்கா 86 ஓட்டங்களும் விட்டுக் கொடுத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |