அதிரடி சதம் விளாசிய சூர்ய குமார் யாதவ்: 202 ஓட்டங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சதம் விளாசி கேப்டன் சூர்யகுமார் யாதவ் அசத்தியுள்ளார்.
3வது டி20 போட்டி
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 3வது டி20 போட்டியில் விளையாடி வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 12 ஓட்டங்களில் வெளியேறினார்.
X/BCCi
அவரை தொடர்ந்து களத்திற்கு வந்த திலக் வர்மாவும்(0) ஓட்டங்கள் எதுவும் குவிக்காமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஆனால் இந்திய அணியின் மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 60 ஓட்டங்கள் விளாசி இந்திய அணியின் ஓட்டங்கள் விகிதத்தை நிலைப்படுத்தினார்.
சதம் விளாசிய சூர்யகுமார்
இக்கட்டான நிலையில் களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
56 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் விளாசி சதத்தை(100) அடித்தார்.
X/ICC
4 குழந்தைகள் இறந்த வழக்கில் தாய்க்கு நேர்ந்த கொடூரம்: 20 வருடங்கள் சிறை தண்டனைக்கு பிறகு தெரியவந்த உண்மை
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் குவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Yashasvi Jaiswal,Suryakumar Yadav, T20, South Africa Cricket Team, Indian Cricket Team.