ருத்ர தாண்டவம் ஆடிய டிகாக்! வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் நிறுத்தப்பட்ட ஆட்டம்
ஆட்டம் கைவிடப்பட்டதால் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது
டிகாக் 18 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் விளாசினார்
உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
ஹோபர்ட்டில் தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. மழை அடிக்கடி குறுக்கிட்டதால் மொத்தம் 18 ஓவர்கள் என குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 79 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக மாதேவேரே 18 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்தார்.
Zimbabwe aim for big finish in the last two overs 👊🏻 #SAvZIM | #T20WorldCup | 📝: https://t.co/D7bhRRb9Qa pic.twitter.com/1f6wzPzHiC
— ICC (@ICC) October 24, 2022
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் இங்கிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் குவிண்டன் டி காக் பவுண்டரிகளாக விளாசினார்.
ஆனால் மீண்டும் மழைகுறுக்கிட்டதால் 64 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 13 ஓட்டங்களே தேவை என்ற நிலையில், மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Points shared with persistent rain in Hobart 🤝#SAvZIM | #T20WorldCup | 📝: https://t.co/D7bhRRb9Qa pic.twitter.com/Ktn0Sd7YRQ
— ICC (@ICC) October 24, 2022
அப்போது தென் ஆப்பிரிக்கா 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
The covers are back on at the Bellerive Oval 🌧#SAvZIM | #T20WorldCup | 📝: https://t.co/D7bhRRb9Qa pic.twitter.com/8PRbYGEhIm
— ICC (@ICC) October 24, 2022