வாணவேடிக்கை காட்டிய அதிரடி மன்னன் ஜோஸ் பட்லர்! இரண்டு விருதுகளை வென்று அசத்தல்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மாலன் - பட்லர் அபாரம்
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் கிம்பெர்லேவில் நடந்தது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் இருவரும் அபாரமாக விளையாடி சதம் விளாசினர். 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்திருந்தபோது ஜோடி சேர்ந்த மாலன் - பட்லர் கூட்டணி, அணியை 246 ஓட்டங்களுக்கு கொண்டு சென்றது.
மாலன் 118 (114) ஓட்டங்களில் மகலா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மொயீன் அலி அதிரடியாக 41 (23) ஓட்டங்கள் எடுத்தார்.
YES, MALA! ???
— England Cricket (@englandcricket) February 1, 2023
Match Centre: https://t.co/T00SJ8oV9Y
?? #SAvENG ??????? @dmalan29 pic.twitter.com/0XXHOEE4zB
பட்லர் சதம்
கேப்டன் என்ற பொறுப்புடன் விளையாடிய ஜோஸ் பட்லர், 127 பந்துகளில் 7 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 131 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 346 ஓட்டங்கள் எடுத்தது.
Our boss with the definition of a captain's knock! ?
— England Cricket (@englandcricket) February 1, 2023
Match Centre: https://t.co/T00SJ8oV9Y
?? #SAvENG ??????? @JosButtler pic.twitter.com/g4Fqg8gewu
தென் ஆப்பிரிக்கா தரப்பில் இங்கிடி 4 விக்கெட்டுகளையும், ஜென்சென் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் பவுமா (35), ஹென்ரிக்ஸ் (52) நல்ல தொடக்கம் அமைத்தனர்.
KEEP GOING REEZA ?
— Proteas Men (@ProteasMenCSA) February 1, 2023
Reeza Hendricks gets his fifth ODI half-century, much to the delight of the fans in his hometown#SAvENG #BePartOfIt pic.twitter.com/yzPjzGs4Zi
கிளாஸன் 80
டுசன் 5 ஓட்டங்களில் அவுட் ஆக, மார்க்ரம் 39 ஓட்டங்கள் எடுத்தார். அதிரடியில் மிரட்டிய கிளாஸன் 62 பந்துகளில் 80 ஓட்டங்கள் விளாசினார்.
BAT ON KLAASY ?
— Proteas Men (@ProteasMenCSA) February 1, 2023
ODI half-century number 5 in the bag for Heinrich Klaasen#SAvENG #BePartOfIt pic.twitter.com/oNkhRISax5
விக்கெட் வேட்டையில் இறங்கிய ஜோஃப் ஆர்ச்சர், தென் ஆப்பிரிக்காவின் கடைசி விக்கெட்டையும் வீழ்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது சிறந்த பந்துவீச்சை (6/40) பதிவு செய்தார்.
@englandcricket
தென் ஆப்பிரிக்கா தோல்வி
இறுதியில் தென் ஆப்பிரிக்கா 43.1 ஓவரில் 287 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வென்றிருந்ததால் தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
எனினும் இங்கிலாந்து கேப்டன் பட்லர் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கைப்பற்றினார்.