படுமோசமாக தோல்வியடைந்து தொடரை இழந்த இங்கிலாந்து! தவிடுபொடியாக்கிய ஒற்றை வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியது.
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி சௌதம்ப்டனில் நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் இங்கிலாந்தின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஹென்ரிக்ஸ் 50 பந்துகளில் 70 ஓட்டங்களும், மார்க்ரம் 36 பந்துகளில் 51 ஓட்டங்களும் விளாசினர்.
ரோசொவ் அதிரடியாக 18 பந்துகளில் 31 ஓட்டங்களும், மில்லர் 9 பந்துகளில் 22 ஓட்டங்களும் விளாச, தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் வில்லே 3 விக்கெட்டுகளும், ஜோர்டன் மற்றும் மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
cricketnmore
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பேர்ஸ்டோவ் மட்டும் ஒருபுறம் போராட, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். சுழற்பந்து வீச்சில் மிரட்டிய ஷம்சி, இங்கிலாந்து கடைசி ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
marketscreener
இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்த பேர்ஸ்டோவ் 30 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்சி 5 விக்கெட்டுகளையும், கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 101 ஒட்டகளுக்கு ஆல்அவுட் ஆக, 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா இமாலய வெற்றி பெற்றது.
PC: espncricinfo
PC: AP Photo/David Cliff
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் சமனில் முடிந்த நிலையில், டெஸ்ட் தொடர் லண்டன் லாட்ஸ் மைதானத்தில் ஆகத்து 17ஆம் திகதி தொடங்குகிறது.
PC: Reuters