சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த மேற்கிந்திய தீவுகள்! கதையை முடித்த ஒற்றை வீரர்
கயானாவில் நடந்த கடைசி டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரை வென்றது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் கயானாவில் நடந்தது.
முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 160 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 144 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் 16 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 246 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக வெர்ரெய்ன்னே 59 ஓட்டங்களும், மார்க்ரம் 51 ஓட்டங்களும் எடுத்தனர். ஜேடன் சீல்ஸ் (Jayden Seales) 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
263 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 222 ஓட்டங்களுக்கு சுருண்டதால், தென் ஆப்பிரிக்கா 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக மோட்டி 45 ஓட்டங்களும், ஹாட்ஜ் 29 ஓட்டங்களும் எடுத்தனர். ரபாடா 3 விக்கெட்டுகளும், கேஷவ் மகாராஜ் 3 விக்கெட்டுகளும், வியான் முல்டர் மற்றும் டேன் பியேட் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
முதல் டெஸ்ட் டிரா ஆனதால், இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
ஆட்டநாயகன் விருதை 34 ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய வியான் முல்டர் (Wiaan Mulder) பெற்றார். தொடரை நாயகன் விருதை மகாராஜ் கைப்பற்றினார்.
??Match Result
— Proteas Men (@ProteasMenCSA) August 17, 2024
??South Africa wins by 40 runs.
The Sir Vivian Richards Trophy is ours! ?#WozaNawe #BePartOfIt #SAvWI pic.twitter.com/u7RY7yXbdB
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |