வீறுநடை போட்டு வந்து இறுதிப்போட்டியில் தோற்ற இந்திய அணி! முத்தரப்பு தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா
மகளிர் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முத்தரப்பு டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.
இறுதிப் போட்டி
தென் ஆப்பிரிக்காவில் மகளிர் முத்தரப்பு டி20 தொடர் நடந்தது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.
இறுதிப்போட்டியில் இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 46 ஓட்டங்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவின் லாபா 2 விக்கெட்டுகளையும், காகா மற்றும் லூஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
REBUILD ?
— Women’s CricZone (@WomensCricZone) February 2, 2023
Skipper Harmanpreet Kaur & Harleen Deol are in the middle for India.
IND: 48/2 (11 overs)
?: Gallo images | #SAvIND pic.twitter.com/BoYCQSsskc
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தது. இதனால் அந்த அணி 66 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தென் ஆப்பிரிக்கா வெற்றி
அப்போது களத்தில் இருந்த க்ளோ ட்ரையோன் அதிரடியாக 32 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணியின் தரப்பில் ஸ்னேஹ் ராணா 2 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா, ராஜேஸ்வரி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
A rollicking half-century for Chloe Tryon ?
— Women’s CricZone (@WomensCricZone) February 2, 2023
She brings up her 5⃣0⃣ in just 30 balls ?
#SAvIND | #CricketTwitter pic.twitter.com/LNhQsqLL1Q
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றியது. போட்டியின் சிறந்த வீராங்கனை விருதை ட்ரையோனும், தொடரின் சிறந்த வீராங்கனை விருதை தீப்தி சர்மாவும் பெற்றனர்.
? Chloe Tryon 57* (32)
— Women’s CricZone (@WomensCricZone) February 2, 2023
? Nonkululeko Mlaba 2/16
Chloe Tryon powers South Africa to a sensational win in the final of the Tri-series ?
?: Gallo images | #SAvIND
A phenomenal all-round performance earns @Deepti_Sharma06 ?????? ?? ??? ?????? ✨#SAvIND | #CricketTwitter pic.twitter.com/g1lQyntvf9
— Women’s CricZone (@WomensCricZone) February 2, 2023