சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு.., தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கைது
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்ம குமாரை எஸ்ஐடி கைது செய்துள்ளது.
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு
ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை விளங்குகிறது.
இக்கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலைகளின் கவசங்களுக்குத் தங்க முலாம் பூசும் செலவை பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவர் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், அந்தக் கவசங்களில் சுமார் 4 கிலோ தங்கம் குறைந்தது கண்டறியப்பட்டு சர்ச்சை ஏற்பட்டது.
இந்த வழக்கை உள்ளூர் பொலிஸார் விசாரித்த நிலையில், எஸ்ஐடி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து, எஸ்ஐடி விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றப்பட்ட நிலையில், உன்னிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

மேலும், சபரிமலை முன்னாள் நிர்வாக அதிகாரி பி.முராரி பாபு, சபரிமலை முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமார் மற்றும் தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் மற்றும் ஆணையர் என்.வாசு ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
அந்தவகையில், தற்போது ஐந்தாவது நபராக தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்ம குமார் என்பவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |