ஆசிரியர் சபீனா கொலைகாரன் உட்பட 11 வெளிநாட்டவர்களை உடனே நாடுகடத்தும் பிரித்தானியா
பிரித்தானியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஆசிரியர் சபீனா நெஸ்ஸா கொலைகாரன் உட்பட 11 அல்பேனிய குற்றவாளிகளை நாடுகடத்த ரிஷி சுனக் அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக 11 கொலைகாரர்கள்
பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அல்பேனிய பிரதமர் எடி ராமா ஆகியோர் முன்னெடுத்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக 11 கொலைகாரர்கள் அல்பேனியாவுக்கு நாடுகடத்தப்பட உள்ளனர்.
@PA
இதில் ஆசிரியர் சபீனா நெஸ்ஸா கொலை வழக்கில் 36 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள Koci Selamaj என்பவரும் ஒருவர் என தெரியவந்துள்ளது. கடந்த 2021 செப்டம்பர் மாதம் தென்கிழக்கு லண்டனில் ஆசிரியர் சபீனா நெஸ்ஸா கொடூரமாக கொல்லப்பட்டார்.
தற்போது அந்த கொலைகாரன் உட்பட 11 அல்பேனியர்கள் நாடுகடத்தப்பட உள்ளனர். பிரித்தானியாவில் பல்வேறு சிறைகளில் 1,330 அல்பேனியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
@PA
மேலும், வெளிநாட்டு கைதிகளுக்காக செலவிடும் தொகையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அமைச்சர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகிறது.
தற்போது வெளிநாட்டு சிறை கைதிகளுக்காக ஆண்டுக்கு 60 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.