மாநாட்டில் விஜய் பேசியதை பார்த்து பிரம்மித்தேன்.., எஸ்.ஏ.சந்திரசேகர் வியப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு முடிந்த நிலையில் விஜய் குறித்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியுள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த ஒக்டோபர் மாதம் 27 -ம் திகதி விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.
இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது, அவர் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. திமுக மற்றும் பாஜகவை தாக்கி பேசிய கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டது.
எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது
இந்நிலையில், நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சி சந்திரசேகர் தமிழக வெற்றி கழக அரசியல் மாநாட்டில் விஜய் பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், "நடிகர் விஜய் அரசியல் மாநாட்டில் கலக்கிவிட்டார். அவர் அப்படி பேசுவார் என்று நினைக்கவே இல்லை. சினிமாவில் விஜய் பேசி பார்த்து இருக்கிறேன். ஆனால், மேடையில் பேசியதை பார்த்து நான் பிரமித்து விட்டேன்.
மனதிற்குள் இருக்கும் வேகம், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தாகம் என அனைத்தும் சேர்ந்துதான் விஜய்யை பேச வைத்தது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |