பட்டையை கிளப்பிய சச்சின்-சேவாக்! வங்கதேசத்தை 11-வது ஓவரிலே முடித்த ஜோடி: முதல் போட்டியில் அபார வெற்றி
மூத்த வீரர்கள் பங்கு கொள்ளும் சாலை பாதுகாப்பு டி20 தொடரில், வங்கதேச அணிக்கெதிரான போட்டியில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும், சாலை பாதுகாப்பு குறித்து மூத்த வீரர்கள் கலந்து கொள்ளும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரில், இந்தியா, மேற்கிந்திய தீவு, அவுஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் கலந்து கொள்ளும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான இந்த தொடர் நேற்று துவங்கியது.
இதில், இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் வங்கதேச லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய வங்கதேச அணிக்கு, துவக்க வீரரான நஜிமுதீன் 49 ரன்கள் குவித்து நல்ல துவக்கம் கொடுத்தார்.
இருப்பினும், அடுத்தடுத்து வந்த வீரர்கள், இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல், பவுலியன் திரும்பியதால், 19.4 ஓவரில் வெறும் 109 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த வங்கதேச லெஜண்ட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய லெஜண்ட்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக வினய் குமார், ப்ரக்யான் ஓஜா மற்றும் யுவராஜ் சிங ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 110 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, முன்னாள் ஜாம்பவான்களான சேவாக்கும், சச்சினும் களமிறங்கினர்.
இதில் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தனது வழக்கமான ஸ்டைலில் ரன் வேட்டையை துவங்கிய சேவாக், வங்கதேச லெஜண்ட்ஸ் வீசிய பந்துகளை எல்லாம் அசால்டாக நாலாபுறமும் சிதறடிக்க, 35 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 80 ஓட்டங்கள் குவித்தார்.
மறுமுனையில் சச்சின் டெண்டுல்கரரும் சேவாக்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்து விளையாடியதன் மூலம் 11-வது ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை எட்டிய இந்திய லெஜண்ட்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Parampara Pratishtha Anushasan.
— Virender Sehwag (@virendersehwag) March 6, 2021
Was fun to see the ball, hit the ball with @sachin_rt paaji at the other end. #RoadSafetyWorldSeries2021 pic.twitter.com/nBXxLHfPmD
A brilliant effort from all the boys to win the game for @IndiaLegends1!
— Sachin Tendulkar (@sachin_rt) March 5, 2021
Enjoyed every second of being back on the field and it was great to see the audiences back in the stadium cheering for us.#RoadSafetyWorldSeries2021 pic.twitter.com/XrooaX0ZJy