42வது முறையாக சாதனை படைத்த மும்பை அணி..வாழ்த்து கூறிய அஸ்வின், சச்சின் டெண்டுல்கர்
ரஞ்சிக்கோப்பையை 42வது முறையாக வென்ற மும்பை அணிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விதர்பா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, 42வது முறையாக ரஞ்சிக்கோப்பையை வென்றது.
மும்பை அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தமிழக வீரர் அஸ்வின் தனது வாழ்த்துப் பதிவில் அஜிங்கியா ரஹானேவை குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது பதிவில், ''தவால் குல்கர்னிக்கு அற்புதமான கேரியருக்கு வாழ்த்துக்கள். உங்களது அர்ப்பணிப்பும், ஒழுக்கமும் மும்பை அணியின் 15 ஆண்டுகளில் முக்கிய வீரர்களில் உங்களை ஒருவராக ஆக்கியுள்ளது.
இன்று விதர்பாவுக்கு எதிரான இறுதி விக்கெட்டை நீங்கள் எடுத்தது மிகவும் பொருத்தமாக இருந்தது. உங்கள் புகழ்பெற்ற ரஞ்சி வாழ்க்கையை முடித்துக் கொண்டீர்கள். கிரிக்கெட்டுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |