பெங்களூரு அணிக்கு தெரிவான சச்சின் பேபி.. பொங்கிய ரசிகர்கள்: வெளியான உண்மை
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சச்சின் பேபியை அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது.
பலரும் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்று தவறாக புரிந்து கொண்டு பெங்களூரு அணி நிர்வாகத்தை விமர்சனம் செய்துள்ளனர்.
உண்மையில் சச்சின் பேபி கேரளாவைச் சேர்ந்த 33 வயதாகும் கிரிக்கெட் வீரர். சச்சின் பையனின் பெயர் அர்ஜுன் டெண்டுல்கர், அவரை மும்பை அணி 20 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.
ஐ.பி.எல். போட்டியில் இதுவரை விளையாடாத நியூசிலாந்து வீரர் ஜேமிசனுக்கு அடிப்படை தொகையாக ரூ. 75 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அவரை கடும் போட்டிக்கு பின்னர், ரூ. 15 கோடிக்கு பெங்களூரு அணி தெரிவு செய்தது.
இங்கிலாந்து சகலதுறை வீரர் மொயீன் அலியை ரூ. 7 கோடிக்குத் தெரிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்திய வீரர் புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவு செய்துள்ளது.
தென் ஆபிரிக்க சகலதுறை வீரர் கிறிஸ் மோரிஸை ரூ. 16.25 கோடிக்குத் தெரிவு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் ஏலத்தில் அதிக தொகைக்குத் தெரிவான வீரர் என்கிற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.