வான்கடே மைதானத்தில் 50வது பிறந்தநாளை கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்
மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கான ஐபிஎல் போட்டியின் நடுவே தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார் சச்சின் டெண்டுல்கர்.
சச்சின் டெண்டுல்கர்
சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்ற ஒரே வீரராக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர்.
1989 ஆண்டில் தனது 16ம் வயதில் இந்திய அணிக்கு அறிமுகமாகினார்.
இந்திய அணிக்காக எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளார்.
50வது பிறந்தநாள் கொண்டாட்டம்
மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியின் இடையே கேக் வெட்டி தனது பிறந்தநாளை மைதானத்தில் கொண்டாடியுள்ளார்.
மேலும், இது எனது மிகவும் குறைவான அரைசதம் இது என்று தெரிவித்துள்ளார்.
A special birthday celebration ?
— IndianPremierLeague (@IPL) April 22, 2023
When the entire Wankhede Stadium collectively wished Happy Birthday to the legendary @sachin_rt ??#TATAIPL | #MIvPBKS pic.twitter.com/wSIymEe8wu
2008 தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளதால், அந்த அணியே இதை ஏற்பாடு செய்துள்ளது.
சுமார் 30 ஆயிரத்துக்கும் மேலான ரசிகர்களின் மத்தியில் கொண்டாடியதால், அங்குத் திரண்டு இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் சச்சின் டெண்டுல்கர் முகம் அடங்கிய முகக்கவசம் வழங்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.