அர்ஜுன் டெண்டுல்கருக்கு கடைசி போட்டியில் வாய்ப்பளித்த LSG: அப்பா சச்சின் உருக்கம்
ஒரு போட்டியில் விளையாட காத்திருந்த அர்ஜுன் டெண்டுல்கரின் பொறுமையை அவரது தந்தை சச்சின் டெண்டுல்கர் பாராட்டினார்.
அர்ஜுன் டெண்டுல்கர்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் 13 போட்டிகள் வரை களமிறக்கப்படவில்லை. இது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே கேள்வியை எழுப்பியது.

ஒரு வழியாக லக்னோ அணி சீஸனின் கடைசிப் போட்டியில் (பஞ்சாப் கிங்ஸிற்கு எதிராக) அர்ஜுன் டெண்டுல்கருக்கு விளையாட வாய்ப்பு அளித்தது.
அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அர்ஜுன் டெண்டுல்கர் (Arjun Tendulkar), அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த பிரப்சிம்ரன் சிங்கின் (69 ஓட்டங்கள்) விக்கெட்டை கைப்பற்றினார்.
தந்தை சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
இதனைத் தொடர்ந்து ஜாம்பவான் வீரரும், அர்ஜுனின் தந்தையுமான சச்சின் டெண்டுல்கர் தனது மகனுக்காக ஒரு உணர்ச்சிப்பூர்வமான குறிப்பை எழுதினார்.
அதில், "மிகச் சிறப்பாக செய்தாய் அர்ஜுன். இந்த சீஸன் முழுவதும் நீ நடந்துகொண்ட விதம் குறித்து நான் பெருமை கொள்கிறேன்; உன் திறமையின் மீது எப்போதும் நம்பிக்கை வைத்து, பொறுமையைக் கடைபிடித்து, அமைதியாகக் கடினமாக உழைத்து, கடைசிப் போட்டி வரை உனக்கான வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தபோதிலும், நேர்மறையாகவே நீ திகழ்ந்தாய்.
கிரிக்கெட் விளையாட்டானது திறமையை எவ்வளவு சோதிக்கிறதோ, அதே அளவு பொறுமையையும் சோதிக்கிறது; இவ்விரண்டையும் இன்று நீ மிக அழகாகக் கையாண்டாய். எப்போதும் பணிவுடன் இரு; நீ எப்போதும் செய்தது போலவே, இந்த விளையாட்டின் மீது தொடர்ந்து மாறாத அன்பு கொண்டிரு. உன்னை எப்போதும் நேசிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |