இந்திய அணியில் சச்சினுக்கு காத்திருக்கும் மிகப் பெரிய பொறுப்பு! கங்குலி எடுத்த அடுத்த அதிரடி முடிவு
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான கங்குலில் அடுத்தடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது சசினுக்கு ஒரு மிகப் பெரிய பொறுப்பு காத்திருப்பதாக கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்ற பின்பு, இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்வது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்.
குறிப்பாக, இந்திய அணியின் முக்கிய வீரர்களாக இருந்து வந்த டிராவிட்டிற்கு சமீபத்தில், இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவியும், அதைத் தொடர்ந்து லட்சுமணனுக்கு சிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனர் பதவியும் கொடுக்கப்பட்டது.
ஆனால், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று கூறப்படும், சச்சினுக்கு எந்த ஒரு பொறுப்பும் கொடுக்கப்படவில்லையே என்ற கேள்வி எழுந்து வந்தது. தற்போது இது தொடர்பான கேள்விக்கு கங்குலி தெளிவான பதில் அளித்துள்ளார்.
அதில், சச்சினுக்கு இந்திய அணியில் மிகப் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. அவருடைய பங்கை இந்திய அணிக்கு எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து நல்லதொரு முடிவை யோசித்து வைஇத்துள்ளேன்.
அப்போது சச்சினின் பங்களிப்பை நீங்கள் பார்ப்பீர்கள், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறியுள்ளார்.
கங்குலியின் இந்த அறிவிப்பு சச்சின் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.