ஃபரூக் அப்துல்லா மகளை விவாகரத்து செய்த சச்சின் பைலட்: வேட்புமனு மூலம் அம்பலம்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான ஃபரூக் அப்துல்லாவின் மகளான சாரா அப்துல்லாவை, சச்சின் பைலட் ரகசியமாக விவகாரத்து செய்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
யார் இந்த சச்சின் பைலட்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட். இவர், தனது தந்தையின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் முகமாக வெளிப்பட்டார்.
இதன்பின், தனது 26 வயதில் மக்களவை எம்பி ஆனார். மேலும், மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். இதன் பிறகு, ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராகவும், துணை முதல்வராகவும் இருந்தார்.
இதனிடையே, தற்போது முதலமைச்சராக இருக்கும் அசோக் கெலாட்டுடன் இவருடைய அரசியல் மோதல் பேசுபொருளானது.
தற்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் டோங்க் தொகுதியில் சச்சின் பைலட் போட்டியிட இருக்கிறார். அப்போது, அவர் வேட்புமனு தாக்கல் செய்த போது, அவர் தனது மனைவியுடன் விவகாரத்து செய்தது அம்பலமாகியுள்ளது.
விவாகரத்து அம்பலம்
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் ஒமர் அப்துல்லாவின் சகோதரியான சாரா அப்துல்லாவை கடந்த 2004 -ம் ஆண்டு சச்சின் பைலட் திருமணம் செய்தார்.
வெளிநாட்டில் படிக்க சென்ற போது இவர்களுக்கு காதல் மலர்ந்துள்ளது. முதலில், இரு வீட்டார் தரப்பிலும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பின்பு, இவர்களுக்குள் காதல் முறிந்தது என்று சொல்லப்பட்ட நிலையில், துணிந்து இருவரும் திருமணம் செய்தனர்.
இதன் பின், மத்திய அமைச்சரவையில் சச்சின் பைலட் இடம்பிடித்த பின்னரே பரூக் அப்துல்லா குடும்பத்தினர் அவரை ஏற்றுக் கொண்டனர். சாரா மற்றும் சச்சினுக்கு விகார், அரன் என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், சச்சின் பைலட் தாக்கல் செய்த வேட்புமனு மூலமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாராவை, சச்சின் விவாகரத்து செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |