நம்ப முடியாத அடி! சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் அணி வீரர்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார்.
புனேவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை அணி நிர்ணயித்த 170 ஓட்டங்கள் இலக்கை குஜராத் அணி மில்லர் மற்றும் ரஷித் கானின் மிரட்டலான ஆட்டத்தினால் எட்டியது.
மில்லர் 51 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்களும், ரஷித் கான் 21 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்களும் விளாசினார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் குஜராத் அணியின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என்னவொரு போட்டி! இரு அணிகளும் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தின. டேவிட் மில்லர் மற்றும் ரஷித் கானின் அடித்தது நம்ப முடியாதது' என பதிவிட்டுள்ளார்.
What a match!
— Sachin Tendulkar (@sachin_rt) April 17, 2022
Both teams played some great cricket.
Some incredible hitting by @DavidMillerSA12 & @rashidkhan_19.#GTvCSK pic.twitter.com/MtrTMKiaow