என்னோட போட்டோவை வைத்து தப்பு பண்றாங்க - சச்சின் டெண்டுல்கர் வருத்தம்
தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுபெற்று பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றளவும் அவரின் சாதனைகள் பல தகர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
48 வயதாகும் அவருக்கு இன்றளவும் அவருக்கு விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அவர் பல முன்னணி நிறுவனங்களுக்கு பிரான்ட் அம்பாசிடராகவும் இருந்து வருகிறார்.
Requesting everyone to remain vigilant about misleading images on social media. pic.twitter.com/VCJfdyJome
— Sachin Tendulkar (@sachin_rt) February 24, 2022
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டு்ள்ளார். அதில் கேசினோ எனப்படும் சூதாட்ட விளம்பரங்களில் எனது புகைப்படத்தை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். எனது முகத்தை மார்பிங் செய்து நான் கேசினோ விளையாட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதுபோல விளம்பரங்கள் வெளியாகி இருப்பது எனக்கு எனது கவனத்திற்கு வந்துள்ளது.
சூதாட்டம், புகையிலை, மது இதுபோன்ற விசயங்களுக்கு நான் எப்போதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தெரிவித்ததில்லை. அதுபோன்ற விளம்பரங்களிலும் நான் நடிக்கவில்லை. மக்களின் கவனத்தை திசை திருப்பி தவறாக வழிநடத்தும் எந்த ஒரு விஷயத்திற்கும் நான் துணை நிற்க மாட்டேன். இந்த விவகாரத்தில் சட்ட குழுவினர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.
மக்களை நல்வழியில் கொண்டு செல்வதிலேயே என்னுடைய நோக்கம் இருக்கும். அதைவிடுத்து இதுபோன்ற தவறான பகிர்வுகளை செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக தனது முகம் பகிரப்பட்டு தவறான விளம்பரங்கள் தவறான செய்திகள் சென்றடைவதால் மக்கள் அதிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு சச்சின் டெண்டுல்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.