சச்சினின் 50-வது பிறந்தநாளையொட்டி 50 அடியில் ஓவியம் வரைந்த ரசிகர்
மும்பையில் சச்சினின் 50-வது பிறந்தநாளையொட்டி ரசிகர் ஒருவர் 50 அடியில் ஓவியம் வரைந்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாள்
இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நேற்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி, அவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வந்தது.
இந்திய கிரிக்கெட் அமைப்புகள் முதல் முன்னாள் அணி வீரர்கள், களத்தில் போட்டியாளர்கள், உலக சர்வதேச வீரர்களின் வாழ்த்துக்களை பெற்றார். மேலும், சமூகவலைத்தளங்களில் சினிமா நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் உட்பட பலர் சச்சினுக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.
50 அடியில் சச்சினுக்கு ஓவியம் வரைந்த ரசிகர்
இந்நிலையில், மும்பையில் சச்சினின் 50வது பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர் அபிஷேக் சதம் என்பவர் காகிதத்தைக் கொண்டு சச்சினின் உருவப்படத்தை 50 அடிக்கு ஓவியமாக வரைந்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அபிஷேக் சதமிற்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Occasion of 50th Birthday of Bharatrantna Master Blaster Mr. Sachin Tendulkar,jabra fan Abhishek Satam Created Largest Eco-Friendly Paper Portrait (24x50feet) in Mumbai..#SachinTendulkar#mumbai@sachin_rt @BCCI pic.twitter.com/l51rpr5KNZ
— Indrajeet chaubey (@indrajeet8080) April 24, 2023