மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சச்சின் டெண்டுல்கரின் சகாப்தம்!
இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சச்சினின் கிரிக்கெட் உலகில் படைத்த சாதனைகளைப் பற்றி அறிவோம்.
சச்சின் டெண்டுல்கள்
சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் காதலர். இவர் ஒவ்வொரு இந்திய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
'தி லிட்டில் மாஸ்டர்' என்றும் 'மாஸ்டர் பிளாஸ்டர்' என்றம் ரசிகர்கள் இவரை அன்போடு அழைத்து வருகின்றனர். சச்சின் தன் 16 வயதில் கிரிக்கெட் உலகில் நுழைந்தார். விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் பல சாதனைகளைப் படைத்தார்.
இதுவரை 100 சர்வதேச சதங்களை அடித்த ஒரே வீரர் சச்சின் மட்டுமே. ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் ஆவார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் இரண்டிலும் ஓட்டங்களை குவித்த சாதனையையும் படைத்தவர். 30,000 ரன்களை கடந்த ஒரே வீரர் இவர்தான்.
சச்சின் 1994ம் ஆண்டு அர்ஜுனா விருதும், 1997ம் ஆண்டு கேல் ரத்னா விருதும், 1998ம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் (2008) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். 2013ம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற ஒரே விளையாட்டு வீரர் இவராவார்.
சச்சின் டெண்டுல்கர் 2012ல் மும்பை வான்கடே மைதானத்தில் தனது சொந்த மைதானத்தில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றதிலிருந்து, அவர் தனது சுயசரிதையை 'பிளேயிங் இட் மை வே' என்ற பெயரில் வெளியிட்டார் என்பது குறிப்படத்தக்கது.