சச்சின் ரசித்து பார்த்த தமிழ் படம் - உற்சாகத்தில் படக்குழுவினர்
சமீபத்தில் ரசித்து பார்த்த தமிழ் படம் குறித்து சச்சின் பகிர்ந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், சமீபத்தில் இணையத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
இதில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
சச்சின் ரசித்த தமிழ் படம்
அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் அடிக்கடி படம் பார்ப்பீர்களா? சமீபத்தில் பார்த்து ரசித்த படம் எது? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சச்சின், "நேரம் கிடைக்கும் போதெல்லாம் படம் பார்ப்பேன். சமீபத்தில் பார்த்து ரசித்த படம் 3 பிஎச்கே மற்றும் ஆட்டா தம்பாய்ச் நாய்" என கூறினார்.
சச்சினை பாராட்டிற்கு பதிலளித்த அருண் விஷ்வா, "நான் பலமுறை டைப் செய்து விட்டேன் ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்த சரியான வார்த்தைகளை கண்டறிய முடியவில்லை.
Typed so many times but still not able to find words to express!
— arun Viswa (@iamarunviswa) August 25, 2025
I will find some n then react!!!!!!
Coz I just saw something which is beyond my wildest imagination! pic.twitter.com/pNSjD4h1TN
சில வார்த்தைகளை கண்டுபிடித்து பின்னர் சொல்கிறேன். ஏனெனில் இப்போது நான் என் கற்பனைக்கு அப்பாற்பட்ட விடயத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Thank you for sharing Santhosh ☺️❤️
— Sri Ganesh (@sri_sriganesh89) August 25, 2025
Thank you very much @sachin_rt sir ☺️❤️❤️ You are our Childhood Hero❣️ This means a lot to our Film. #3BHK https://t.co/nekiZyp8Zy
மேலும், 3 பிஎச்கே பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த், சரத்குமார், தேவயானி உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 3பிஎச்கே படம் வெளியானது.
நடுத்தர குடும்பம் சொந்த வீடு வாங்குவதை மையமாக கொண்ட இந்த திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |