வைபவின் பயமற்ற ஆட்டம்! அற்புதமான இன்னிங்ஸ்..வியந்து பாராட்டிய சச்சின், காவ்யா மாறன்
வைபவ் சூர்யவன்ஷியை ருத்ர தாண்டவ ஆட்டத்தை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
ருத்ர தாண்டவமாடிய வைபவ் சூர்யவன்ஷி
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸின் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் 11 சிக்ஸர்களுடன் 101 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவரிலேயே 212 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Vaibhav’s fearless approach, bat speed, picking the length early, and transferring the energy behind the ball was the recipe behind a fabulous innings.
— Sachin Tendulkar (@sachin_rt) April 28, 2025
End result: 101 runs off 38 balls.
Well played!!pic.twitter.com/MvJLUfpHmn
சச்சின், காவ்யா மாறன் பாராட்டு
அந்த வகையில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) தனது பதிவில்,
"வைபவின் பயமற்ற அணுகுமுறை, துடுப்பாட்ட வேகம், ஆரம்பத்திலேயே Lengthஐ தேர்ந்தெடுப்பது மற்றும் பந்தை வெல்வதற்குப் பின்னால் ஆற்றலை மாற்றுவது ஆகியவை அற்புதமான இன்னிங்ஸின் பின்னணியில் இருந்தன. இறுதி முடிவு என்னவென்றால் 38 பந்துகளில் 101 ஓட்டங்கள். சிறப்பாக விளையாடினார்!!" என வைபவ் துடுப்பாடிய வீடியோவையும் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.
அதேபோல், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறனும், தனது எக்ஸ் தள பதிவில்,
"சரியான பொழுதுபோக்கு காட்சி, ஒருவேளை நீங்கள் தவறவிட்டிருந்தால்..." என வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர்கள் விளாசிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.
The Proper Entertaining Show😍
— Kavya Maran (@Kavya_Maran_SRH) April 29, 2025
In case you missed it #vaibhavsuryavanshi
pic.twitter.com/8FpoXxKU5v
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |