தோல்வியையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்: ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர்
இந்திய அணியின் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார்
ஒரு அணியின் வெற்றியை கொண்டாடுவது போல், அதன் தோல்வியையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் - சச்சின் டெண்டுல்கர்
நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல் தான் வெற்றியும், தோல்வியும் என சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அடிலெய்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்து போனது.
மேலும், பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் இந்திய அணி எதிர்கொள்ளும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் மனமுடைந்தனர். தோல்வியால் வருத்தமடைந்த ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கே.எல்.ராகுல் உட்பட வீரர்கள் சிலரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
t20worldcup
இந்த நிலையில் ரசிகர்களின் செயலுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
A coin has two sides, so does life.
— Sachin Tendulkar (@sachin_rt) November 10, 2022
If we celebrate our team’s success like our own then we should be able to take our team's losses too…
In life, they both go hand in hand.#INDvsENG
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போல தான் வாழ்க்கையும். நாம் நமது அணியின் வெற்றியை கொண்டாடுகிறோம் என்றால், அதேபோல் தான் அணியின் தோல்வியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் அவை இரண்டும் கைகோர்த்துக் கொள்ளும்' என தெரிவித்துள்ளார்.