இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சச்சின் கொரோனா தொற்றால் பாதிப்பு! அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை
இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் டுவிட்டரில், இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
எங்கள் குடும்பத்தில் மற்ற யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.
— Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2021
இப்போது மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சுகாதார பணியாளர்களுக்கும், நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ராய்பூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டியில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.