மோசமாக அசிங்கப்படுத்தி ஜாம்பவானை வசைபாடிய ரசிகர்கள்! உண்மையை போட்டுடைத்த தினேஷ் கார்த்திக்
விராட் கோலியை காரணம் காட்டி சச்சின் டெண்டுல்கரை ரசிகர்கள் வசைபாடி வந்த நிலையில் அது தொடர்பாக தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா, தென்னாப்பிரிக்க டி20 தொடரில் 2ஆவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் கோலி 49* ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் கோலியிடம் நீங்கள் அரை சதம் அடிக்க ஸ்டரைக் தரவா என கேட்க, வேண்டாம் நீங்கள் ஆடுங்கள் என கோலி சொன்னதாக தகவல் வெளியானது.
இதையடுத்து கோலிக்கு அணி நலனே முக்கியம், அவர் சுயநலமில்லாதவர் என ரசிகர்கள் புகழ்ந்தனர். அதே போல 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற குறிப்பிட்ட ஒரு போட்டியில் சச்சின் 96* (104) ரன்களில் எதிர்முனை கிரீஸில் இருக்கிறார்.
behindcricket
தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்துகொண்டிருக்கிறார். வெற்றிபெற 47 பந்துகளில் 2 ரன்கள்தான் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக் சச்சினுக்கு ஸ்ட்ரைக் கொடுப்பதற்காக, மலிங்கா பந்துகளை தடுப்பாட்டம் மூலம் விளையாடுகிறார். அப்போது மலிங்கா லெக் சைட் ஒயிடாக வீசிய பந்தை தினேஷ் கார்த்திக் தடுப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபோது பந்து, பேட்டில் பட்டு கீப்பருக்கு வலது புறத்தில் பவுண்டரி சென்றது.
இதனால் சச்சின் 96* (104) ரன்களுடன் சதமடிக்காமல் நடையைக் கட்டினார். அப்போது சச்சின் ஏன் என்னை சதம் அடிக்க விடவில்லை என கார்த்திக்கை திட்டியதாகவும் அவர் ஒரு சுயநலவாதி என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இது குறித்து நேற்று விளக்கமளித்த தினேஷ் கார்த்திக், நான் 2009ல் பவுண்டரி அடித்தவுடன் கார்த்திக், நடந்த விஷயங்களுக்காக கவலைப்படாதீர்கள், அணியின் வெற்றியே எனக்கு திருப்திதான்’’ என சச்சின் கூறியதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சச்சினை திட்டி அசிங்கப்படுத்தியவர்கள் ரசிகர்கள் பலர் தற்போது அதற்கு மன்னிப்பு கேட்டு சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
hotstar