பல அறுவைசிகிச்சைகள் செய்து நலமுடன் இருக்கிறேன்.. அவர்கள் தான் காரணம்: நெகிழ்ந்த சச்சின் தெண்டுல்கர்
சர்வதேச செவிலியர்கள் தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி சச்சின் தெண்டுல்கர் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் தெண்டுல்கர், கிரிக்கெட்டில் பல்வேறு அரிய சாதனைகளை படைத்துள்ளார். 24 ஆண்டுகாலம் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர், பல காயங்களையும் சந்தித்துள்ளார்.
அவருக்கு உடலில் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் களத்தில் இறங்கி மிரட்டியிருக்கிறார். இந்த நிலையில், இன்று சர்வதேச செவிலியர்கள் தினம் கடைபிடிக்கப்படுவதால் சச்சின் தெண்டுல்கர் தனது வாழ்த்தினை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
Nurses play a key role in the success of our healthcare system. Their dedication & compassion is unparalleled.
— Sachin Tendulkar (@sachin_rt) May 12, 2022
As an athlete, I had many surgeries & my recovery was possible because of hardworking nurses.
Thanking them for their selfless service on #InternationalNursesDay.
அவர் தனது பதிவில், 'நமது மருத்துவ அமைப்பின் வெற்றியில் செவிலியர்கள் மிகப்பெரிய பங்கினை கொண்டுள்ளனர். அவர்களது அர்ப்பணிப்புக்கும், கருணைக்கும் ஈடுயிணை இல்லை.
ஒரு விளையாட்டு வீரராக நான் பல அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டுள்ளேன் மற்றும் அதிலிருந்து மீண்டு வந்தது சாத்தியமானது என்றால், அது செவிலியர்களின் கடின உழைப்பால் தான். சர்வதேச செவிலியர்கள் தினத்திலும் சுயநலமில்லாமல் சேவையாற்றும் அவர்களுக்கு எனது நன்றிகள்' என தெரிவித்துள்ளார்.