ஐபிஎல் விளையாட ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்த சச்சின் மகன்! அவரின் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?
ஐபிஎல் தொடருக்கான ஏலம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆன, சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இந்த ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் செல்கிறது.
அந்தளவிற்கு ஐபிஎல் தொடருக்கு இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த தொடரில் மட்டும் ஒருவர் அற்புதமாக விளையாடிவிட்டா, அவர் தேசிய அணியில் இடம் பிடிப்பது உறுதியாகிவிடும்.
அந்தளவிற்கு இந்த தொடர் சிறந்த வீரர்களை கண்டுபிடிக்க உதவுகிறது.இதன் காரணமாக முதல் தர போட்டிகளில் விளையாடி வரும் வீரர்கள் இதில் எப்படியாவது விளையாடி தங்கள் திறமையை காண்பிக்க போராடி வருகின்றனர்.
அந்த வகையில் இந்தாண்டிற்கான ஏலம் வரும் 18-ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஏலம் சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்தாண்டு நடைபெறவுள்ள ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவை தவிர எந்தெந்த நாட்டில் இருந்து எவ்வளவு வீரர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என் விவரமும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், இந்த ஏலத்தில், டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளார். ஏலத்திற்கு அவருக்கான குறைந்தபட்ச விலை 20 லட்சம் என்று கூறப்படுகிறது.
அர்ஜூன் டெண்டுல்கரை பொறுத்தவரை மும்பை இண்டியன்ஸ் அணிக்காக நெட் பவுலராக சில வருடங்கள் இருந்துள்ள்ளார். கடந்த ஐபிஎல் தொடரின் போதும் ஐக்கிய அமீரத்திற்கு அவர் அணியுடன் சென்றிருந்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சையது முஷ்டாக் அலி டிராபில் விளையாடினார். ஆனால் அந்தளவிற்கு அவர் சொபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
