பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் ஒரே ஒரு இந்திய ரயில்.., எது தெரியுமா?
பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் இந்திய ரயில்வே துறை பெரிய பங்கு வகிக்கிறது.
பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் சாமானிய மக்கள் கூட ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.
இந்திய ரயில்வே தினமும் சுமார் 2.5 கோடி மக்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்கிறது.
இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களை ஏற்றிச் செல்ல ரயில்வே இதற்காக மொத்தம் 13,452 ரயில்களை பராமரித்து வருகிறது.
அந்தவகையில், இந்த ஆயிரக்கணக்கான ரயில்களில், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் ஒரே ஒரு ரயில் மட்டுமே உள்ளது.
சச்கந்த் எக்ஸ்பிரஸ் என்பது அமிர்தசரஸ் மற்றும் நாந்தேத் இடையே இயக்கப்படும் ஒரு ரயில் ஆகும்.
இந்த ரயில் லாங்கர் ஆன் வீல்ஸ் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் ஒரே ரயில் ஆகும்.
இந்த ரயில் பஞ்சாப் அமிர்தசரஸிலிருந்து நாந்தேட்டிற்கு மொத்தம் 2081 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது.
33 மணி நேரம் பயணம் செய்யும் இந்த ரயில் மொத்தம் 39 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
இந்த ரயில் சீக்கியர்களின் புனித தலங்களான ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் அமிர்தசரஸ் மற்றும் ஸ்ரீ ஹசூர் சாஹிப் நாந்தேட் ஆகியவற்றை இணைக்கிறது.
இரண்டு புனித தலங்களை இணைப்பதால், இந்த ரயில் சீக்கியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதில் பயணிக்கும் பயணிகளுக்குக் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் உணவு கடந்த 29 ஆண்டுகளாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஏற்படும் செலவுகள் குருத்துவாராக்களால் பெறப்படும் நன்கொடைகள் மூலம் ஏற்கப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |