ஆசியக்கோப்பையில் விஸ்வரூபமெடுத்த இலங்கை வீரர்! மிரட்டல் ஆட்டம்
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 257 ஓட்டங்கள் எடுத்தது.
குசால் மெண்டிஸ்
கொழும்பில் இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு ஆசியக்கோப்பை போட்டி நடந்து வருகிறது. இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.
தொடக்க வீரர் கருணரத்னே 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா 40 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
எனினும் குசால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா இருவரும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். குசால் மெண்டிஸ் 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
[Y6WBO ]
சதீர சமரவிக்ரமா அரைசதம்
அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில் சதீர சமரவிக்ரமா அதகளம் செய்தார்.
கடந்த அவர் சிக்ஸர், பவுண்டரிகள் என தெறிக்க விட்டார். அவர் 72 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 93 ஓட்டங்கள் விளாசினார்.
Sadeera Samarawickrama scored a stunning 93-run knock, setting a new personal best in ODI cricket!#AsiaCup2023 #SLvBAN #LankanLions pic.twitter.com/qqSNBfhX22
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 9, 2023
கேப்டன் ஷனகா 32 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இலங்கை அணி 257 ஓட்டங்கள் எடுத்தது.
வங்கதேச அணியின் தரப்பில் டஸ்கின் அகமது, ஹசன் தலா 3 விக்கெட்டுகளும், ஷோரிபுல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Sri Lanka sets a target of 258! Sadeera's brilliant 93 and Kusal's 50 have set the stage. Now, it's over to our bowlers to shine!#AsiaCup2023 #SLvBAN #LankanLions pic.twitter.com/mYFm3GqsBE
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 9, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |