பந்துவீசும் முன்பே கணித்து கேட்ச்! அற்புதம் நிகழ்த்திய இலங்கை வீரரின் வீடியோ
இலங்கை விக்கெட் கீப்பர் சதீரா சமரவிக்ரமா ஆப்கான் வீரரின் கேட்சை நொடிப்பொழுதில் செயல்பட்டு பிடித்தார் மிரட்டினார்.
ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.
இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கான் அணி 198 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஆனாலும் அந்த அணியில் ரஹ்மத் ஷா 91 ஓட்டங்கள் எடுத்தார். அவர் பிரபத் ஜெயசூரியா ஓவரில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றார்.
An outrageous catch from Sadeera Samarawickrama...!!! ?
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 2, 2024
- The presence of minds...!!! ?pic.twitter.com/fPiFHo1g8n
அதனை முன்னதாகவே கணித்த விக்கெட் கீப்பர் சதீரா சமரவிக்ரமா, நொடிப்பொழுதில் இடதுபுறம் நகர்ந்து கேட்ச் செய்தார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |