லண்டன் மேயர் எடுத்த ஒற்றை முடிவு... இனி ஒவ்வொரு பாடசாலை மாணவரின் குடும்பமும் 1000 பவுண்டுகள் சேமிக்கலாம்
லண்டனில் பாடசாலைகளில் இலவச மதிய உணவுக்கான திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார்.
மேலும் ஓராண்டுக்கு
இதனால் ஒவ்வொரு பாடசாலை மாணவரின் குடும்பமும் 1,000 பவுண்டுகள் சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது. பிரித்தானியா முழுவதும், குழந்தைகள் தங்கள் பெற்றோர் யுனிவர்சல் கிரெடிட், வருமான ஆதரவு மற்றும் குழந்தை வரிக் கடன் போன்ற பலன்களைப் பெறுபவர்கள் என்றால் பாடசாலை உணவை இலவசமாகப் பெறலாம்.
@getty
இந்த நிலையில் தற்போது லண்டனில் மேலும் ஓராண்டுக்கு தொடர்புடைய திட்டம் நீட்டிக்கப்படும் என்று மேயர் Sadiq Khan உறுதி அளித்துள்ளார். அத்துடன், 2024 மற்றும் 2025க்கு என 140 மில்லியன் பவுண்டுகள் தொகையை தொடர்புடைய திட்டத்திற்கு என செலவிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி இந்த திட்டம் அமுலுக்கு வரும். கடந்த ஆண்டு இலவச உணவு திட்டத்திற்கு என லண்டன் மேயர் 135 மில்லியன் பவுண்டுகளை செலவிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியில்
இதனால் ஒவ்வொரு நாளும் 287,000 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் வரையில் 17 மில்லியன் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.
@sky
இதனிடையே. அரசு சார்பு அமைப்பு ஒன்று முன்னெடுத்த ஆய்வில், லண்டனில் விலைவாசி உயர்வு காரணமாக 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் சுமார் 35 சதவிகிதத்தினர் குறைவான அளவுக்கு மட்டுமே உணவு பண்டங்களும் அத்தியாவசிய பொருட்களும் வாங்குவதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன், 41 சதவிகிதத்தினர் குறைவான அளவுக்கு தண்ணீர், மின்சாரம் அல்லது எரிவாயுவை பயன்படுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, 10 பேர்களில் மூவர் தாங்கள் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |