முதலீடு செய்ய பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் - இந்தியா, இலங்கையின் இடம் என்ன?

Sri Lanka India Switzerland
By Karthikraja Jul 07, 2026 06:07 AM GMT
Report

உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே, முதலீட்டாளர்கள் தங்களது வருமானத்தை எந்த நாடுகளில் பாதுகாப்பாக முதலீடு செய்வது என கேள்வி எழுந்துள்ளது.

2026 ஆம் ஆண்டில் உலகில் முதலீடு செய்ய பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ்" நிறுவனம், "ஆல்பா ஜி" என்ற உலகளாவிய தரவு ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளது.

முதலிடத்தில் சுவிட்சர்லாந்து

உலகளாவிய முதலீட்டு அபாயம் மற்றும் பின்னடைவு குறியீடு 2026 என்ற இந்த அறிக்கையில் 100 க்கு 88.4 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. 

முதலீடு செய்ய பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் - இந்தியா, இலங்கையின் இடம் என்ன? | Safe Investment Country Rank Where India Srilanka

டென்மார்க் 85.1 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், நார்வே 83.5 புள்ளிகளுடன் 3வது இடத்தையும், சிங்கப்பூர் 83.4 புள்ளிகளுடன் 4வது இடத்தையும், ஸ்வீடன் 83.2 புள்ளிகளுடன் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.

நிலையான அரசியல் அமைப்புகள், வலுவான சட்ட ஆட்சி, ஆரோக்கியமான பொது நிதி, குறைந்த நாணய ஏற்ற இறக்கம், வெளிப்படையான நிர்வாகம், மீள்திறன் கொண்ட நிதி நிறுவனங்கள் காரணமாக இந்த நாடுகள் முன்னணியில் உள்ளன. 

மேல் நடுத்தர வருமான நாடாக உயர்ந்த இலங்கை - இந்தியாவின் நிலை என்ன?

மேல் நடுத்தர வருமான நாடாக உயர்ந்த இலங்கை - இந்தியாவின் நிலை என்ன?

இதில், ஜேர்மனி 80.7 புள்ளிகளுடன் 9வது இடத்தையும், கனடா 78.5 புள்ளிகளுடன் 11வது இடத்தையும், பிரித்தானியா 75.2 புள்ளிகளுடன் 19வது இடத்தையும், பிரான்ஸ் 74.2 புள்ளிகளுடன் 23வது இடத்தையும், அமெரிக்கா 73 புள்ளிகளுடன் 24வது இடத்தையும் பிடித்துள்ளது.

இதே போல் ஐக்கிய அரபு அமீரகம் 71.3 புள்ளிகளுடன் 29வது இடத்தையும், அவுஸ்திரேலியா 69.6 புள்ளிகளுடன் 32வது இடத்தையும், கத்தார் 68.1 புள்ளிகளுடன் 38வது இடத்தையும், மலேசியா 67.4 புள்ளிகளுடன் 41வது இடத்தையும், சவுதி அரேபியா 67 புள்ளிகளுடன் 44வது இடத்தையும், குவைத் 66.5 புள்ளிகளுடன் 45வது இடத்தையும் பிடித்துள்ளது. 

இந்தியா, இந்த பட்டியலில் 54.4 புள்ளிகளுடன் 104வது இடத்தில் உள்ளது. 

முதலீடு செய்ய பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் - இந்தியா, இலங்கையின் இடம் என்ன? | Safe Investment Country Rank Where India Srilanka

இந்திய ரூபாயின் மதிப்பில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சட்ட விவகாரங்களில் ஏற்படும் காலதாமதம் போன்றவை காரணமாக இந்தியா பின்தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

41.62 புள்ளிகளுடன் இலங்கை 137வது இடத்தில் உள்ளது. 31.83 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 148வது இடத்தில் உள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US