226 ரன் இலக்கினை 18.4 ஓவரிலேயே எட்டிய அணி! PSL லீக்கில் பாகிஸ்தான் வீரர் சிக்ஸர்மழை
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணி 227 ஓட்டங்கள் சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது.
மாஸ் சதாகத் 62 ஓட்டங்கள்
லாகூர் கடாஃபி மைதானத்தில் நடந்த PSL 2026 போட்டியில் ஹைதராபாத் கிங்ஸ்மென் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதின.
🚨Meet SahibZada Farhan, Premium batter of Pakistan's T20 Cricket
— SheR•ALI (@Sher__Ali) April 1, 2026
And if You still don't know him ask Jasprit Bhumrah pic.twitter.com/YcK5m5gcB0
முதலில் களமிறங்கிய ஹைதராபாத் கிங்ஸ்மென் அணியில் சைம் அயூப் 27 ஓட்டங்களில் வெளியேற, மாஸ் சதாகத் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
லபுஷேன் 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மாஸ் சதாகத் (Maaz Sadaqat) 26 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் குவித்தார். அடுத்து வந்த உஸ்மான் கான் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 25 ஓட்டங்கள் விளாசினார்.
ஷார்ஜீல் கான் (Sharjeel Khan) ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 51 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) விளாச ஹைதராபாத் கிங்ஸ்மென் அணி 225 ஓட்டங்கள் குவித்தது. மொஹம்மது வாசிம் 2 விக்கெட்டுகளும், டர்னர், சிடில் மற்றும் நவாஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய முல்தான் சுல்தான் அணியில் தொடக்க வீரர்களான ஸ்டீவன் ஸ்மித், சாஹிப்ஸதா ஃபர்ஹான் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர்.
சாஹிப்ஸதா ஃபர்ஹான் ருத்ர தாண்டவம்
இந்தக் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 49 பந்துகளில் 104 ஓட்டங்கள் குவித்தது. ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) 20 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து பிலிப் 9 ஓட்டங்களில் வெளியேற, ஷான் மசூட் 29 ஓட்டங்கள் எடுத்தார். டர்னர் 4 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சாஹிப்ஸதா ஃபர்ஹான் (Sahibzada Farhan) சிக்ஸர்களை பறக்கவிட்டு சதம் அடித்தார்.
அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த அராஃபத் மின்ஹாஸ் அதிரடி காட்ட (26), முல்தான் சுல்தான்ஸ் அணி 18.4 ஓவர்களில் 227 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
சாஹிப்ஸதா ஃபர்ஹான் ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 106 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |