சஞ்சு சாம்சனை முந்தி ஐசிசி விருதைப் பெற்ற பாகிஸ்தான் வீரர்
டி20 உலகக்கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் சாஹிப்ஸதா ஃபர்ஹான், ஐசிசியின் கௌரவ விருதை பெற்றார்.
சாம்சன்
இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் 2026 டி20 உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் அதிரடி அரைசதம் விளாசி மிரட்டினார்.
தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் (Sanju Samson) 321 ஓட்டங்கள் குவித்தார்.
ஆனால், பாகிஸ்தானின் சாஹிப்ஸதா ஃபர்ஹான் (Sahibzada Farhan) அவரை பின்னுக்குத்தள்ளி, பிப்ரவரி 2026க்கான ஐசிசி ஆடவர் மாதத்தின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
ஃபர்ஹான் உலகக்கிண்ணத் தொடரில் 383 ஓட்டங்கள் குவித்து, அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார்.

ஃபர்ஹான் உருக்கம்
அவரைத் தவிர வில் ஜேக்ஸ் மற்றும் ஷாட்லி வான் ஷால்விக் ஆகியோர் ஆடவர் பிரிவில் விருத்திற்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

மொத்தம் 7 போட்டிகளில் விளையாடிய ஃபர்ஹான் இரண்டு சதங்கள், இரண்டு அரைசதங்கள் அடித்து, 76.60 சராசரியும், 160.25 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்திருந்தார்.
"இந்த ஐசிசி விருதை வென்றது எனக்கு அற்புதமான உணர்வை தருகிறது; குறிப்பாக, உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் ஒவ்வொரு கனத்தையும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் உலகக்கிண்ணத் தொடர் போன்ற ஒரு பிரம்மாண்ட மேடையில் வெளிப்படுத்திய ஆட்டத்திறனுக்காக இவ்விருது கிடைத்தது" என ஃபர்ஹான் கூறியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |