பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி மாணவருக்கு சிறை! முழு பின்னணி..
பிரித்தானியாவில் சக மாணவியை அச்சுறுத்தியதற்காக 22 வயது இந்திய வம்சாவளி மாணவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் கல்லூரியில் இருந்தும் நீக்கப்பட்ட்டார்.
ஹொங்ஹொங்கைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் சாஹில் பவ்னானி (Sahil Bhavnani). 22 வயதாகும் இவர் பிரித்தானியாவில் Oxford Brookes பல்கலைக்கழகத்தில் படித்துவந்துள்ளார்.
கடந்த மாதம், பவ்னானி ஒரு பெண் செவிலியர் மாணவிக்கு 100 பக்க கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், ஆன்லைனில் கிடைத்த கவிதைகளைக் கொண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
பவ்னானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவாரோ என்று பயந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அப்பெண் தனக்கு எந்த விதமான உறவிலும் விருப்பமில்லை என்று பலமுறை தெளிவுபடுத்தியதாகவும், மேலும் பவ்னானி தன்னை தொடர்ந்து துன்புறுத்தினால் காவல்துறையை தொடர்பு கொள்வதாக எச்சரித்ததாகவும் கூறினார்.
ஒஹ்வஹுருத்தல் அதிகமானத்தை அடுத்து, பவ்னானி மீது புகார் அளித்துள்ளார், அதனடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
நிதிமானாரா விசாரணையில், பவ்னானி பின்தொடர்ந்து அச்சுறுத்தியதற்காக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, பவ்னானி சனிக்கிழமை தனது தந்தையுடன் ஹாங்காங் திரும்புவார் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் நீதிபதி நைகல் டேலி ஆக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் தீர்ப்பை அறிவித்தார்.
ஒரு பெண் மாணவியை அச்சுறுத்திய சாஹலுக்கு 4 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, 2 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டது, மேலும் ஐந்தாண்டு தடை உத்தரவும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் இருந்தும், அவரது பட்டப்படிப்பில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
ஏற்கனவே ஜாமீனை மீறியதால், அவர் ஏற்கனவே ஒரு மாதம் காவலில் இருந்தார் என கூறப்படுகிறது.