வாழ்க்கை முழுவதும் சந்தோஷம் நிரம்ப வேண்டுமா? அப்போ இந்த மந்திரத்தை சொல்லுங்க
வாழ்நாள் முழுவதும் நீங்கள் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்று தானே ஆசைப்படுவீர்கள்.
அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? முதலில் மனம் அமைதியாக இருக்க வேண்டும். அதைவிட இறையருள் முக்கியம்.
ஆகவே வீட்டில் இருந்து வழிப்படக்கூடிய இறைவழிபாடு பற்றி தெரிந்துக்கொள்வோம்.
சாய்பாபாவை வழிபட்டு வந்தால், நம் வாழ்வில் சந்தோஷம் தான் அதிகரித்து இருக்கும். அதிலும் அதற்கான மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் நல்லது.
மந்திரம்
“ஓம் சாய் குருவாயே நமஹ ஓம் ஷீரடி தேவாயே நமஹ ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ”
எவ்வாறு வழிபட வேண்டும்?
தினமும் காலையில் சுத்தமாக குளித்துவிட்டு, ஸ்ரீ சாய்பாபாவை வணங்கி அவரின் திரு உருவத்தின் முன் நின்று இந்த மந்திரத்தை 9 முறை கூற வேண்டும்.
இவருக்கு உகந்த நாளாக வியாழக்கிழமை இருக்கின்றது. அன்றைய நாளில் முந்திரி பருப்பு அல்லது கற்கண்டு நிவேதனமாக வைத்து பூஜிக்க வேண்டும்.
பின்னர் இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து வணங்கி வந்தால், மனதில் இருக்கும் ஒரு இனம் புரியாத பயம் நீங்கும். மனக்கவலை நீங்கி, குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சி உருவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |